ரஷ்யா மீதான தடைகளை ஏற்க முடியாது!! -சீனா கண்டனம்-
ரஷ்யா அரசாங்கத்தின் மீது விதிக்கப்பட்டு வரும் தடைகள் ஒருதலைபட்சமானது என்று சீனா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.