ரஷியாவுடன் பேச்சுவார்த்தை!! -பெலாரஸ் சென்ற உக்ரைன் குழு-
உக்ரைன் மீது ரஷியா படையினர் தொடர்ச்சியாக நடத்திவரும் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ரஷிய ஜனாதிபதியின் உதவியாளரான இந்த விளாடிமிர் மெடின்ஸ்கி இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்:-
இரு தரப்பும் சமரச பேச்சுவார்த்தைக்கு தீர்மானித்துள்ளன. உக்ரைனியர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்புடன் இது நடக்கும். பயண பாதை 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். உக்ரைனிய பிரதிநிதிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றார்.