SuperTopAds

தொடரும் போர்!! -அடைக்கலம் தேடிப் போலந்துக்குச் செல்லும் உக்ரைனிய மக்கள்-

ஆசிரியர் - Editor II
தொடரும் போர்!! -அடைக்கலம் தேடிப் போலந்துக்குச் செல்லும் உக்ரைனிய மக்கள்-

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நாட்டு இராணுவம் முன்னெடுத்துள்ள படையெடுப்பால் அங்கிருந்து அண்டைநாடான போலந்துக்கு ஏராளமான பொது மக்கள் அடைக்கலம் தேடிச் செல்கின்றனர்.

உக்ரைனில் உள்ள இராணுவத் தளங்கள், அரசு கட்டமைப்புகள் மீது ரஷ்யா நேற்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் குடியிருப்புகளிலும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதனால் அச்சமடைந்த மக்கள் கார்களிலும் மற்ற வாகனங்களிலும் புறப்பட்டு மேற்கில் உள்ள அண்டைநாடான போலந்துக்கு அடைக்கலம் தேடிச் செல்கின்றனர்.

எல்லை தாண்டி வரும் உக்ரைனியர்களைத் தங்கவைக்கப் போலந்தில் தற்காலிகத் தங்குமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.