ரஷிய தரப்பில் 800 படையினர் உயிரிழப்பு!! -உக்ரைன் அறிவிப்பு-
ரஷிய நாட்டின் படைத் தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு இன்று வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாகவும் போர் நீடிக்கிறது என கூறப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை மந்திரியான ஹன்னா மால்யார் ருவிட்டரில் வெளியிட்டு உள்ள அறிவிப்பில்:-
எதிரி நாட்டின் இழப்புகள் மதிப்பிடப்பட்டு உள்ளன. இதன்படி, இன்று வெள்ளிக்கிழமை காலை 3 மணியளவில் 7 விமானங்கள், 6 உலங்குவானூர்திகள் மற்றும் 30ற்க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன. ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.