SuperTopAds

புடினின் உத்தரவுக்கு அமைய போர்!! -உக்ரைனில் குண்டு மழை பொழியும் ரஷ்ய படைகள்-

ஆசிரியர் - Editor II
புடினின் உத்தரவுக்கு அமைய போர்!! -உக்ரைனில் குண்டு மழை பொழியும் ரஷ்ய படைகள்-

கிழக்கு உக்ரேனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அந்நாட்டின் தலைநகர் கீவ்வில்யும் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிய ஆரம்பித்துள்ளது. 

உக்ரைன் மீது நடந்த பல மணிநேர தாக்குதலில் விமான தளங்கள் மற்றும் வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு விட்டன என ரஷ்யா தெரிவித்து உள்ளது.

உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார்.

உக்ரைன் இராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் எனவும்  உக்ரைன் ராணுவத்தினர் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும் என புதின் கூறியிருந்தார்.

உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையை அடுத்து அங்கு ரஷ்ய படைகளை அனுப்ப ஜனாதிபதி புதின் உத்தரவிட்டநிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்க ஆரம்பித்துள்ளன. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் குண்டு மழை பொழிய ஆரம்பித்தன ரஷ்ய இராணுவ படைகள். 

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கை தாக்க தொடங்கியது ரஷ்யா. ஓடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் தாக்கி வருகிறது.