யாழ்.மாவட்ட மாணவர்களுக்கு உதவ இராணுவம் தயாராக உள்ளது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மாணவர்களுக்கு உதவ இராணுவம் தயாராக உள்ளது..!

யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதற்கு இராணுவம் என்றும் துணை நிற்கும் என யாழ் 51வது படைக் கட்டளைத் தளபதி சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை 53வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 250பேருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் தேவைகளை அறிந்து இராணுவம் தங்களால் ஆன உதவிகளை செய்துவருகிறது. அந்த வகையில் அன்சல் லங்கா நிறுவனத்தின் உதவியுடன் 

பாடசாலை மாணவர்களுக்கு காலணி மற்றும் சுகாதார கையுறைகளை வழங்கியுள்ளோம். இலங்கையின் இராணுத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கமைய யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி செனரத் யாப்பா வழிநடத்தலின் கீழ் 

குறித்த செயற்திட்டம் இடம்பெற்று வருகிறது. ஆகவே நாட்டின் சிறந்த பிரஜைகளாக மாணவர்களை உருவாக்குவதற்கு தேவையான உதவிகளை இராணுவம் வழங்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு