பாகிஸ்தான் பிரதமரின் மகன் உள்ளிட்ட 3 பேர் மதுபானத்துடன் கைது!!
பாகிஸ்தான் பிரதமரின் வளர்ப்பு மகன் உள்ளிட்ட 3 பேர் மதுபான வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கமைய விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் முதல் பெண்மணியான புஷ்ரா பீபியின் முதல் திருமண தொடர்பின் மூலம் பிறந்த மூஸா மனேகா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
மூஸா தனது நண்பர்கள் இருவருடன் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், லாஹ_ரிலுள்ள கடாபி கிரிக்கெட் மைதானத்துக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்பெண்மணியின் மகன் உள்ளிட்ட மூவர், உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கமைய, பொலிஸ் பிணையில் அன்றைய தினமே விடுவிக்கபட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரியொருவர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.