SuperTopAds

மலேரியா காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
மலேரியா காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்..

இலங்கையிலிருந்து மலேரியா காய்ச்சல் பூரணமாக ஒழிக்கப்பட்டுள்ளபோதும், மீள வும் மலேரியா காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில் மக் கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியமாகு ம் என யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.

உலக மலேரியா விழிப்புனர்வு வாரத்தை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பது,

உலக மலேரியா தினமானது ஏப்ரல் 25ஆம் திகதி கொண்டாப்படுகின்றது. இலங்கையில் மலேரியாவானது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என 2012ஆம் ஆண்டு உலக சுகாதார தாபனம் தெரிவித்திருந்த்து.

ஆனாலும் இலங்கைக்கு எந்த நேரத்திலும் மலேரியா நோய் பரவலாம் என்ற அச்சம் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மலேரியா நோய் காவி கிருமிகளை கொண்டுவருகின்ற போது, அதனை காவிச் செல்லும் நூளம்புகள் இங்கே ஏராளம் உள்ளது. இதனால் மலேரியா நோயானது இலகுவாக பரவிட முடியும்.

எனவே இவற்றை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக தற்போது மலேரியாவை பரப்புகின்ற ஸ்ரவன்ஷி என்ற புதிய வகை நூளம்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை கட்டுபடுத்துவது தொடர்பான சோதனை நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வருபோவர்க்கு காச்சல்கள் ஏற்படும் போது அவர்களை முழுமையான சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்களைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை தவிர மலேரியா நோய் உள்ள நாடுகளுக்கு செல்வோருக்கும் அந் நோய் தடுப்பு தொடர்பான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இலங்கையில் இருந்து ஒழிக்கப்பட்ட மலேரியா நோயானது மீண்டும் நாட்டுக்குள் பரவாமல் கட்டுபடுத்த சுகாதார துறையினர் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர் என்றார்.