சிறுவர் ஆபாசப் படங்கள்!! -கனடாவில் கைதான தமிழருக்கு தொடரும் நெருக்கடி-
கனடாவில் சிறுவர் ஆபாசப் படங்களை தம்வசம் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழர் மீது கூடுதல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 வயதான கார்த்திக் மணிமாறன் என்பருக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிமாறன் மீது முதலில் 2021 ஆம் ஆண்டு சிறுவர் ஆபாச படங்கள் வைத்திருந்தது, குழந்தைகளின் ஆபாசத்தை அணுகியது மற்றும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை விநியோகித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்நிலையில், அவருக்கு எதிராக தற்போது கூடுதல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறுவர்களின் ஆபாச படங்களுடன் மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல் விடுத்தல் குற்றவியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கார்த்திக் மணிமாறனால் பல சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும். அவர்கள் தயக்கம் இன்றி முன் வந்து தகவல்களை வழங்க வேண்டும் என்றும் பொலிஸார் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்கள்.