33 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த 9 வயது சிறுவன்!!
ஆப்கானிஸ்தானின் நாட்டில் உள்ள சாபுல் மாகாணத்தில் ஷொகாக் எனும் கிராமத்தில் 33 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் 9 வயது சிறுவன் வீழ்ந்து சிக்கிக் கொண்டுள்ளார்.
ஹைதர் என்ற குறித்த சிறுவன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார். தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுவனை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள சிறுவனை மீட்பதற்கு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள்துழை கிணற்றுக்குள் சிக்கிக் கொண்ட சிறுவனுடன் அவரது தந்தை உரையாடும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.