SuperTopAds

இளவரசர் மீதான பாலியல் குற்றச்சாட்டு!! -பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 16 மில்லியன் ரூபா இழப்பீடு-

ஆசிரியர் - Editor II
இளவரசர் மீதான பாலியல் குற்றச்சாட்டு!! -பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 16 மில்லியன் ரூபா இழப்பீடு-

எலிசபெத் மகாராணியாரின் இளைய மகனான இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் குற்றச்சாட்டை சாட்டிய பெண்ணுக்கு 33 மில்லியன் ரூபா (இலங்கை நாணய மதிப்பில்) இழப்பீடாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2001 ஆம் ஆண்டு 17 வயதான வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக இளவரசர் ஆண்ட்ரு மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 

குறித்த சம்பவம் தொடர்பில் அந்தப் பெண் தரப்பில் நியூயோர்க் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும், குறித்த குற்றச்சாட்டை மறுக்கும் இளவரசர் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பில் அவர்  நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அந்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் எலிசபெத் மகாராணியாக பதவியேற்று 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடி வரும் இச்சமயத்தில், குறித்த வழக்கை சுமூகமாக நிறைவு செய்துக் கொள்ளுமாறு எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் சார்ள்ஸ் ஆண்ட்ரூவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இளவரசர் ஆண்ட்ரூ, குறித்த பெண்ணுடன் சமரசம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் ஒரு பகுதியாக வர்ஜீனியா கியூப்ரே நடத்தி வரும் தொண்டு நிறுவனத்துக்கு 16 மில்லியன் டொலர் வழங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து, சட்டநடைமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் வழக்கை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.