ரஷ்யா எந்த சந்தர்ப்பத்திலும் படையெடுக்கலாம்!! -எச்சரிக்கும் அமெரிக்கா-
உக்ரேன் மீது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் படையெடுப்பதற்கான துருப்புக்களை ரஷ்யா கொண்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உக்ரேனில் உள்ள அமெரிக்கர்கள், எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக வான்வழித் தாக்குதல்கள் மூலம் படையெடுப்புகள் ஆரம்பிக்கப்படலாம். இது, வெளியேறுவதைக் கடினமாக்குதுடன், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.