ஆப்கான் ஐ.எஸ் தலைவர் குறித்து தகவல் வழங்குவோருக்கு 10 மில்லியன் டொலர்!!
ஆப்கான் ஐ.எஸ் குழுவின் தலைவர் என்று நம்பப்படும் சனாவுல்லா கபாரி தொடர்பில் தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க இராஜாங்க திணைக்கம் அறிவித்துள்ளது.
2021 ஆகஸ்ட் 26 ஆம் திகதி காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய அமெரிக்க இராஜாங்க திணைக்கம் உதவி கோருகிறது.
இந்த தாக்குதலில் 13 அமெரிக்க துருப்பினர் உள்ளடங்களாக 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொராஸான் எனப்படும் ஆப்கன் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.