15 வயது சிறுமி கொலை!! -பிரித்தானியாவில் உடன் பிறந்த சகோதரன் கைது-
பிரித்தானியாவில் தன்னுடைய 15 வயது தங்கையை தானே கொலை செய்ததாக 19 வயது இளைஞர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2021 ஜூலை 31 ஆம் திகதி, வேல்ஸின் அபெர்கெலேவுக்கு அருகிலுள்ள டை மாவ்ர் விடுமுறை பூங்காவில் ஒரு இளைஞர் மற்றும் சிறுமிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று பார்த்தபோது, அமாண்டா எனும் 15 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியையே அவரது சகோதரனே கொலை செய்தது விசாரணைகள் ஊடாக தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, சிறுமியின் சகோதரனான 19 வயது மேத்தியூ செல்பியை பொலிஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பிப்ரவரி 7 ஆம் திகதி நீதிம்னற விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட மேத்தியூ, தானே தனது தங்கையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
ஆனால், மேத்யூ தரப்பு வக்கீல், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், அவரை மீண்டும் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என கெண்ட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை மார்ச் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது உத்தவிட்டார்.