SuperTopAds

காதலித்து 8 பெண்களை மணம் முடிந்த நபர்!! -ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் குடும்பம் நடத்தும் அதிசயம்-

ஆசிரியர் - Editor II
காதலித்து 8 பெண்களை மணம் முடிந்த நபர்!! -ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் குடும்பம் நடத்தும் அதிசயம்-

தாய்லாந்தில் வசிக்கும் ஓங் டாம் சோரூட் என்பவர் பச்சை குத்தும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 8 மனைவிகள் உள்ளனர். 8 பேரும் ஒரே வீட்டில் எந்தவித சண்டை சச்சரவும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.  

யு.+டி.யூப் வீடியோ ஒன்றில்  சோரூட்  தனது ஒவ்வொரு மனைவியையும் அறிமுகப்படுத்தி அவர்கள் எப்படி சந்தித்து காதல் சொன்னேன் என்பதை விளக்கியுள்ளார். மேலும் குறித்த 8 மனைவிகளும் கணவர் பற்றி கூறும் போது ரொம்பவும் அக்கறையானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். 

இப்போது மனைவிகள் ஆளுக்கு ஒரு வேலைக்கு போகிறார்கள். கைநிறைய சம்பாதிக்கிறார்கள். மாலை நேரம் வீட்டுக்கு வந்து ஜாலியாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இரவு படுக்கையை எப்படி பகிர்ந்து கொள்வார்கள் என்று கேட்டால், திட்டமிட்டு பகிர்ந்து கொள்வார்களாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் சோரூட்டுடன் படுத்து கொள்வார்களாம். ஒரு மனைவி சோரூட்டுடன் படுக்கையை பகிரும்போது, மற்ற 7 மனைவிகளும் வேறு ஒரு ரூமில் படுத்துக்கொள்வார்களாம்.