SuperTopAds

நிலவுடன் மோதப் போகும் ரொக்கெட்!! -அடுத்த மாதம் நிகழும் என்கிறது நாசா-

ஆசிரியர் - Editor II
நிலவுடன் மோதப் போகும் ரொக்கெட்!! -அடுத்த மாதம் நிகழும் என்கிறது நாசா-

பூஸ்டர் என்று அழைக்கப்படும் ரொக்கெட்டின் மேல்பகுதி எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி நிலவில் மோத உள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தகவல்  வெளியிட்டுள்ளது. 

அந்நாட்டின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் 2015 ஆம் ஆண்டு காலநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றை ‘பால்கன்9’ ரொக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.

செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்திவிட்டு ரொக்கெட் பூமிக்கு திரும்ப வேண்டும். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த ரொக்கெட் பூமிக்கு திரும்ப முடியாமல் போனதால் அது விண்வெளியிலேயே கைவிடப்பட்டது. அப்போது முதல் இந்த ரொக்கெட் பூமியையும், நிலவையும் குழப்பமான முறையில் சுற்றி வருகிறது.

இந்த நிலையில் பூஸ்டர் என்று அழைக்கப்படும் ரொக்கெட்டின் மேல்பகுதி எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி நிலவில் மோத உள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. 

4 டொன் எடையுள்ள பூஸ்டர், நிலவை நோக்கி மணிக்கு 9,000 கி.மீ. வேகத்தில் பயணித்து வருவதாகவும், அது மோதும் போது நிலவில் பெரிய அளவில் பள்ளம் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் பூஸ்டர் நிலவின் பின்புறத்தில் மோத இருப்பதால் அந்த நிகழ்வை பூமியில் இருந்து பார்க்க முடியாது எனவும் விஞ்ஞானிகள் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.