விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முயற்சி! இந்திய தேசிய புலனாய்வு அமைப்பை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவல்..

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முயற்சி! இந்திய தேசிய புலனாய்வு அமைப்பை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவல்..

இந்திய கடவுச்சீட்டு உள்ளிட்ட போலியான ஆவணங்களை பயன்படுத்தி தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) சுட்டிக்காட்டியுள்ளது. 

இலட்சத்தீவுகளின் அருகில் கடந்த வருடம் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் பயணித்த படகு ஒன்றை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியதுடன், அதில் பயணித்த விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த வருடம் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உளவு பிரிவை சேர்ந்த சற்குணம் என அழைக்கப்படும் சபேசனை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. 

மேலும் லெட்சுமணன் மேரி பிரான்சிஸ் என்ற பெண்ணும் ஒக்டோபர் 1ஆம் திகதி தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் தொடர்பான வழக்கையும் (NIA) விசாரித்து வருகிறது.

லெட்சுமணன் மேரி பிரான்சிஸுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கென்னிஸ்டன் பெர்னாண்டோ, கே.பாஸ்கரன், ஜோன்சன் சாமுவேல், எல்.செல்லமுத்து ஆகியோர் மீது கடந்த 18ஆம் திகதி (NIA)வழக்குப் பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்குகள் தொடர்பாக கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத (NIA)அதிகாரி ஒருவர், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து இந்திய பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை இவர்கள் பெற்றுள்ளனர். போலி இந்திய ஆவணங்களை வைத்து 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கம் செய்யும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மும்பை ஃபோர்ட் கிளையில் பெருந்தொகையான பணத்தை பெற்றுள்ளதும் 

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு