SuperTopAds

பத்திரிகையாளர் கேட்ட கேள்வி!! -கோபத்தில் கெட்ட வார்த்தையால் திட்டிய ஜோ பைடன்-

ஆசிரியர் - Editor II
பத்திரிகையாளர் கேட்ட கேள்வி!! -கோபத்தில் கெட்ட வார்த்தையால் திட்டிய ஜோ பைடன்-

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் பத்திரிகையாளர் ஒருவர் பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய கேள்வியால் கோபமடைந்து அவரை கெட்ட வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஜோ பைடன் ஆட்சி தடுமாறுவதால் அவரது செல்வாக்கு சரிந்து வருகின்றது. 

இந்நிலையில் ஜோ பைடனுக்கு களங்கம் ஏற்படுத்திய மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜோ பைடன் பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

அப்போது ஜோ பைடன் அவரை கெட்ட வார்த்தையில் திட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜனாதிபதி தரப்பு கூறுகையில், பணவீக்கம் குறித்து தவறான தரவுகளை வைத்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அந்த தகவலை விமர்சிக்கும் வகையில் தான் ஜனாதிபதி பேசினார். 

பத்திரிகையாளரை அவர் தனிப்பட்ட முறையில் திட்டவில்லை. ஜனாதிபதியே பத்திரிகையாளரை தொடர்புகொண்டு பேசிவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.