ஈபிஆர்எல்எவ்வின் சின்னத்தில் போட்டியிடத் தயார்! - கஜேந்திரகுமார்
சைக்கிள் சின்னத்தில் போராட்டியிடுவதுதான் ஈபிஆர்எல்எவ் இற்குப் பிரச்சனை எனில் ஈபிஆர்எல்எவ் இன் சின்னத்திலும் இணைந்து போட்டியிட தாங்கள் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட ஈபிஆர்எல்எவ் தயாராகி வருவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகமிழைக்கிறது என அதிலிருந்து வெளியேறிய கட்சிகள் இணைந்து அதிலும் மோசமான கொள்கைகளையுடைய தமிழர்விடுதலைக் கூட்டணியுடன் கூட்டு வைத்து அக்கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதனை எந்த கொள்கைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.