SuperTopAds

உதயசூரியனால் ஆட்டம் கண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஆசிரியர் - Admin
உதயசூரியனால் ஆட்டம் கண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு

வடக்கில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸும் கூட சில சபைகளில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன. கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சில இடங்களில் சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறது.

இதனைத்தாண்டி ஆனந்த சங்கரி அவர்களின் உதயசூரியன் கூட்டு குறைவான ஆசனங்கள் பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்க தேவைப்பட்டதொன்றாகியது, உதய சூரியன் இன்றி ஆட்சியமைக்க முடியாத நிலையும் தோன்றியது.

மக்களின் கருத்தை பொருட்படுத்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் போக்குக்கு கிடைத்த பெரிய அடிதான் இந்த முடிவுகள் என்று வர்ணிக்கும் மூத்த பத்திரிகையாளரான வித்யாதரன், அந்தக் கட்சியின் அடித்தளத்துக்கே பலமான அடி விழுந்துள்ளதாக கூறுகிறார்.

தெற்கில் மஹிந்த கணிசமான வெற்றியை குவித்துள்ள அதேவேளை, வடக்கு கிழக்கில் இன்னுமொரு விசயம் அமைதியாக நடந்திருக்கிறது. அங்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான உறுப்பினர்களை பெற்றிருந்தாலும், இந்த தேர்தல் அதற்கு ஒரு பின்னடைவாக பலராலும் பார்க்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்துடன் தாம் முன்னெடுக்கும் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நடவடிக்கைகளுக்கான ஒரு ஆணையாக இந்த தேர்தலை அந்தக் கட்சி முன்வைத்திருந்தது. ஆனால், யாழ் மாநகர சபை உட்பட வடக்கு கிழக்கில் பல சபைகளில் அந்த கட்சியால் ஆட்சியமைக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் அப்படி அமைப்பதாயின் அவர்கள் தாம் தமிழர் எதிரிகளாக வர்ணித்த சில கட்சிகளோடு கூட்டுச் சேர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.