SuperTopAds

யாழ்.வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு! இருவர் மருத்துவமனையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு! இருவர் மருத்துவமனையில் அனுமதி..

யாழ்.வல்வெட்டித்துறை - கரணவாய் வடக்கு, கொற்றாவத்தை பகுதியில் நேற்றய தினம் இரவு குடும்ப தகராறை தீர்க்க சென்ற பொலிஸார் தாக்கியதாக கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, அண்ணன் தம்பிக்கு இடையில் முரண்பாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த முரண்பாடு தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸில் சகோதரன் ஒருவன் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்னர் சனி இரவு 7:45. மணியளவில் குறித்த முறைபாபட்டாளரின் எதிராளிகளை சந்திக்கவேண்டும்என பொலிஸார் கூறியுள்ளனர். 

இதனடிப்படையில் அழைத்து வரப்பட்ட பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். குறித்த சம்பவத்தில், குலசேகரம் மிதுலன் (வயது- 24) என்பவரது அந்தரங்க பகுதியில் 

பொலிசார் மிதித்தாக தெரிவித்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் 40 வயதுடைய அப்புக்குட்டி வசந்தன் என்பவர் பொலிஸார் தாக்கியதில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்கா அனுமதிக்காது 

பொலிஸ் தடுப்புக் காவலில் தொடர்ந்தும் வைத்திருந்த நிலையில் உறவினர்கள் யாழ். மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து அவரும் நேற்று காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தாக்குதல் நடாத்திய இரண்டு பொலிஸாரும் குறித்த விடயம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறையிட சென்றபோது அங்கிருந்த பொலிஸார் தடுத்ததாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

இதேவேளை விசாரணைக்காக சென்ற பொலிஸாருடன் முரண்பட்ட சிலர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தினர் எனவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தொிவிக்கின்றன.