148 அதிபர்கள் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம்...

ஆசிரியர் - Editor I
148 அதிபர்கள் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம்...

மிகை ஊழியர் அடிப்படையில் 2012.08.08ம் திகதி நியமனம் பெற்ற 148 அதிபர்களை நிரந்தர சேவைக்குள் உள்ளீர்க்குமாறு கோரி தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

இந்த விடயத்தை ஒரு அவசர விடயமாக கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கு மாறு ஜனாதிபதியை கோரி இம் மாதம் 27ம் திகதி மேற்படி கடிதத்தை சிறீதரன் ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்கின்றார். 

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 

வடமாகாணத்தில் 2012.08.08ம் திகதி முதல் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் பெற்ற 148 அதிபர்கள் இன்றுவரை நிரந்தர அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாமல் பழிவாங் கப்பட்டுள்ளார்கள். 

மிக நீண்டகாலமாக போக்குவரத்து இடையூறுகள் நிலவிய பயணமே செய்ய முடியாத குறிப்ப hக தரைவழிபாதைகளே இல்லாத நெடுந்தீவு, எழுவை தீவு, அனலைதீவு, நயினாதீவு போன்ற இடங்களிலும் 

வன்னி காட்டு பிரதேசங்கள் நிறைந்த போக்குவரத்து பாதைகளே அற்ற அதிகஸ்டமான பிரதே சங்களிலும் யுத்தம் நடந்த சூழ்நிலைகளிலெல்லாம் பலத்த எறிகணைகளுக்கும், பயங்கரமா ன தாக்குதல்களுக்கும் மத்தியில் 

தியாக மனப்பான்மையுடன் பல பாடசாலைகளை கட்டி வளர்த்து வடமாகாணத்தின் கல்வி நிலையை உயர்த்துவதில் அதிககூடிய பங்களிப்பு செய்த இவ் அதிபர்கள் இலங்கையின் கல்வித்துறை அகராதியிலேயே இல்லாத “மிகை ஊழியர்கள”; என்ற சொற்பதத்தின் 

அடிப்படையில் அதிபர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்தும் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நியமனங்கள் வழங்கப்பட்டபோதும ;நியமனம் தொடர்பான விரிவான விளக்கங்களோ, தெளிவுபடு த்தல்களோ உரியவர்களால் வழங்கப்படவில்லை. 

கடந்த காலங்களில் இந்த நாட்டிலே கடமை நிறை வற்றும் அதிபர்கள் குறித்த காலத்தின் பின் எவ்வாறு நிரந்தர சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்களோ அதே அடிப்படையில் தாங்க ளும் அந்நியமனத்திற்குள் உள்வாக்கப்படுவோம் என்ற நம்பிக்கையை இவ் அதிபர்கள் 

கொண்டிருந்தார்கள். ஆனால் ஏறத்தாள 8 வருடங்கள் நெருக்கும் வேளையிலும் இவர்களது நியமனம் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நியமனம் பெற்றவர்களில் பலர் அதிபர் சேவையை அடைவதற்கான 2 வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்கைளில் தோற்றி 

சித்தி பெற்றுள்ளார்கள் என்பதுடன் இன்னும் 5 தொடக்கம் 20 வருடங்கள் வரை சேவையாற்றக்கூடிய வயதெல்லையை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள். அதிபர் பதவிகளில் கடமைத தழுவரை மேற்கொள்ளும் இலங்கை ஆசிரியர் சேவையின் 

உத்தியோக த்தர்களை அதிபர் சேவைக்கு சேர்த்துக் கொள்வது தொடர்பில் அ.வி12.1101.530.035ம் இலக்க 2012.08.08ம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாகவும், கல்வி அமைச்சு செயலாளரின் ஈ.டீ.04.60.01.18ம் இலக்க 2013.01.03ம் 

திகதிய நியமனக் கடிதத்தின் அடிப்படையிலும் இன்றளவும் எந்தவிதமான வேதன ஏற்றங்களோ, பதவியுயவர்வுகளோ வழங்கப்படாது வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறக்கூட முடியாதவாறு மனிதாபிமானற்ற முறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

மாணவர்களுக்கு கல்வியை வழங்கி எதிர்கால மனித மூலதனத்தை உருவாக்குகின்ற பல பட்டங்கள் பெற்று உயர்ந்த கல்வியலாளர்களாக தங்களை ஆக்கிக்கொண்ட இவ் அதிபர்கள் நியமனமற்று பாதி க்கப்படுவது இலங்கையின் கல்வி கொள்கையை 

பாதிப்புக்குள்ளாக்குவதோடு மனிதாபிமான அடிப்படையில் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். எனவே தாங்கள் இவ்விடயத்தில் அதீத கவனம் செலுத்தி எதிர்கால சந்ததிக்கு ஏணிப்படியாக இருக்கின்ற இவ் அதிபர்கள் மிகை ஊழியர்கள் 

அடிப்படையில் நியமனம் பெற்ற திகதியிலிருந்து அடுத்த பதவி உயர்வுக்கான காலத்தை தீர்மானித்து இவர்கள் தோற்றியுள்ள தடைதாண்டல் பரீட்சைகளின் பெறுபேறுகளையும் கவனத்தில் எடுத்து இவர்களும் இந்த நாட்டிலே கௌரவமுள்ள மனிதர்களாக மனச்சோர்வற்று 

தங்கள் கல்வி பணிகளை ஆற்றுவதற்கு தெளிவான நடவடிக்கை ஒன்றை விரைவாக செயற்படுத்துவமாறு தங்களை தயவுடன் கேட்டு கொள்கிறேன்.  


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு