முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தூபியை துப்புரவு செய்த பல்கலைக்கழக மாணவர்கள்...

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தூபியை துப்புரவு செய்த பல்கலைக்கழக மாணவர்கள்...

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவிடத்தை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் முள்ளியவளை மக்கள் இணைந்து சிரமதானம் செய்துள்ளார்கள்

இன்றைய தினம் காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இனப்படுகொலை நினைவிடத்தை மாணவர்கள் சிரதமதானம் செய்தனர். மாணவர்களுடன் முள்ளியவளை மக்க ள் மற்றும் மு

ள்ளிவாய்க்கால் மக்களும் இணைந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு உணவு மற்றும் குடிநீரை பெற்று கொடுத்தனர். இந்த சிரமதான பணி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது

தொடர்ந்து மாணவர்கள் முல்லைத்தீவு நகரில் ஒரு வருடமாக போராட்டம் நடத்திவரும் காணாம ல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடினர். தொடர்ந்து ஒரு வருட த்திற்கும் மேலாக 

சொந்த நிலத்தை விடுவிக்ககோரி போராட்டம் நடத்திவரும் கேப்பாபிலவு மக்களை பல்கலைக்கழ மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடினர். பின்னர் கிளிநொச்சி நகரில் கடந்த ஒரு வருடத் திற்கும் மேலாக 

போராட்டம் நடத்திவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் மாணவர்கள் சந்தித் து கலந்துரையாடினர்

 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு