ஒமைக்ரொன் வைரஸை எதிர்க்கும் தடுப்பூசி!! -தயாரிக்கும் பணியில் பைஸர் நிறுவனம்-

ஆசிரியர் - Editor II
ஒமைக்ரொன் வைரஸை எதிர்க்கும் தடுப்பூசி!! -தயாரிக்கும் பணியில் பைஸர் நிறுவனம்-

ஒமைக்ரொன் வைரஸ் திரிபை எதிர்க்கும் திறன் கொண்ட தடுப்பூசி ஒன்றைத் தயாரிக்கும் பணியில் அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் மிக மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

இதன்படி ஒமைக்ரொன் திரிபுக்கான தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் தயாரிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

முதல் இரு தடுப்பூசி டோஸ்களை செலுத்திக் கொண்டவர்களில் அதிகமானோருக்கு ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தொற்றுறுதியாகியுள்ளது. செயலூக்கி தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதன் ஊடாக நோய் தாக்கம் குறைவடைகின்றது.

இந்நிலையில் ஒமைக்ரொன் வைரஸ் திரிபைக் கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசி தயாரிக்கப்படுவதாக பைஸர் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு