ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு பதிலடி கொடுக்க முடிவு!! -தற்கொலைதாரிகளை இராணுவத்தில் இணைக்கும் தலிபான்கள்-
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்பானிஸ்தானை தம்வசப்படுத்தியுள்ள தலிபான் அரசு தற்கொலைதாரிகளை இராணுவத்தில் சேர்த்து வருகின்றனர்.
ஆப்பாகில் கடந்த வருடும் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அந்நாட்டில் ஆட்சி அமைவதற்கு முன்பு வரை பயங்கரவாதிகள் குழுவாக இயங்கி வந்தனர். அவர்களில் ஒரு அங்கமாக தற்கொலைதாரிதிகள் இடம் பெற்று இருந்தனர்.
சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பு இந்த பயங்கரவாதிகள் அமெரிக்கா படை மற்றும் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் பரவலாக இயங்கி வரும் தீவிரவாத குழுக்களின் பயங்கரவாதிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடிவு செய்து அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.எஸ். இயக்கத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான் அரசு தற்கொலைதாரிகளை இராணுவத்தில் சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இராணுவத்தில் முக்கிய பொறுப்பு கொடுக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.