பிரேசிலில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு!!
பிரேசிலில் நாட்டில் முதலாவது ஒமிக்ரோன் தொற்று மரணம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் கோயாஸ் மாநிலத்தின் அபரேசிடா டி கோயானியா நகரில் 68 வயது வயோதிபர் ஒருவரே இதன் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வயோதிபர் நுரையீரல் நோய் காரணமாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் என அபரேசிடா டி கோயானியா நகர சபையின் தகவல் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான வயோதிபர் மூன்று தடுப்பூசி போட்டவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.