SuperTopAds

தடுப்பூசி போடாமல் இருப்பதற்கு மகன்களை கடத்திய தாய்!! -ஸ்பெயிலில் பரபரப்பு சம்பவம்-

ஆசிரியர் - Editor II
தடுப்பூசி போடாமல் இருப்பதற்கு மகன்களை கடத்திய தாய்!! -ஸ்பெயிலில் பரபரப்பு சம்பவம்-

ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் தாய் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்வதற்காக தனது மகன்களை தாய் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்நாட்டில் 5 முதல் 11 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த 45 வயது தாய் ஒருவர், தனது 14 மற்றும் 12 வயது மகன்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை தடுக்க, அவர்களை கடத்திச் சென்றுள்ளார்.

அந்தத்தாய் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரது இரு மகன்களும் தந்தையிடம் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் பாடசாலை முடிந்து இரு மகன்களையும் அழைத்து சென்ற தாய், தனது பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமா, கூடாதா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என கணவருக்கு கடிதம் எழுதி தெரிவித்தார்.

இதையடுத்து சிறுவர்களின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் அளித்ததை தொடர்ந்து அந்த தாய் சரணடைந்தார். இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் அந்த பெண்மணியை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.