SuperTopAds

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல்!! -சிரியாவில் 9 படையினர் பலி-

ஆசிரியர் - Editor II
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல்!! -சிரியாவில் 9 படையினர் பலி-

சிரிய இராணுவ வாகன தொடரணி மீது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நேற்று திங்கட்கிழமை பதுங்கியிருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இத் தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர். 

இராணுவத்தினர் சென்ற பேருந்து மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள், ரொக்கட்டுக்களையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்  2019 ஆம் ஆண்டு முழுமையாக ஒடுக்கப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டன. 

இருப்பினும் அண்மையில் சிரியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. அவர்கள் அங்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.