SuperTopAds

காசாவின் ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்!!

ஆசிரியர் - Editor II
காசாவின் ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்!!

பாலஸ்தீனத்திலிருந்து ராக்கெட்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் நிலைகளை இஸ்ரேல் குறிவைத்துள்ளதாக அந் நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை காசா பகுதியில் இருந்து டெல் அவிவ் கடற்பரப்பை நோக்கி இரு ராக்கெட்டுகள் வீசப்பட்டதற்கு பதிலடியாக, அன்று நள்ளிரவில் விமானங்கள் ஹமாஸ் தளத்தை இலக்கு வைத்து குண்டுவீசியதாக இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

மட்டுப்படுத்தப்பட்ட இந்த தாக்குதலில் எந்த உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.