SuperTopAds

கருணைக் கொலைக்கு அனுமதிக்கும் சட்டம்!! -ஆஸ்திரியாவில் நிறைவேறியது-

ஆசிரியர் - Editor II
கருணைக் கொலைக்கு அனுமதிக்கும் சட்டம்!! -ஆஸ்திரியாவில் நிறைவேறியது-

சுயவிருப்பின் பேரில் கருணைக் கொலை செய்து கொள்ளும் சட்டம் ஆஸ்திரியாவில் அனுமதிக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.

தீவிர நோய்வாய்ப்பட்ட அல்லது நிரந்தர பலவீனமான நிலையில் உள்ள வயோதிபர்களை அவர்களது விருப்பின் பேரின் கருணைக் கொலை செய்ய இதன் மூலம் வழி ஏற்பட்டுள்ளது.

இறுக்கமான நடைமுறைகளின் கீழ் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் நடைமுறை ஒழுங்குபடுத்தப்படும். உயிரை மாய்த்துக்கொள்ள செய்யப்படும் விண்ணப்பங்கள் இரு மருத்துவர்களால் மதிப்பிடப்படும். அந்த இரு மருத்துவர்களில் ஒருவர் நோய் தடுப்பு மருந்து நிபுணராக இருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.