ஒரு நொடியில் 2 பேருக்கு தொற்று!! -பிரான்சில் அதியுச்ச அச்சம்-
பிரான்சில் மிக மோசமாக கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் நேற்று மட்டும் 2 இலட்சத்து 8 ஆயிரம் பேருக்கு உறுதியாகி உள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- கடந்த செவ்வாய்க்கிழமை 1,80,000 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில் நேற்று முன்தினம் 2 இலட்சத்து 8 ஆயிரம் பேருக்கு உறுதியாகி உள்ளது.
மேலும் அங்கு ஒவ்வொரு நொடிக்கும் 2 பேருக்கு தொற்று உறுதியாகிறது என்றும், மருத்துவமனைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெளியில் வரும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். ஒமைக்ரான் பரவலை அலை எனக்கூறுவதை விட ஆழிப்பேரலையாக உள்ளது என்றார்.