SuperTopAds

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள்!! -அமெரிக்க விஞ்ஞானின் அசத்தல் கண்டுபிடிப்பு-

ஆசிரியர் - Editor II
ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள்!! -அமெரிக்க விஞ்ஞானின் அசத்தல் கண்டுபிடிப்பு-

உலகை அச்சுறுத்திவரும் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்த உதவும் நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டு அசத்தி உள்ளனர்.

இந்த ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பும் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர். இந்த நிலையில், ஒமைக்ரான் வைரசை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருளை (ஆன்டிபாடி) அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். 

ஒமைக்ரானை மட்டுமல்லாது உருமாறிய பிற வைரஸ்களை தடுப்பதற்கும் இந்த நோய் எதிர்ப்பு பொருள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.