உலக நாடுகளை சுனாமியாக தாக்கும் ஒமிக்ரோன், டெல்டா திரிபுகளின் கலவை!! -கவலை வெளியிடும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்-
உலகெங்கும் ஆபத்தான டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகளின் கலவையானது மிகத் தீவிரமாக பரவி சுனாமி போன்ற கொரோனா அலையை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கவலை தெரிவித்துள்ளார்.
தற்போது டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகளின் கலவையால் இரட்டை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுவே தொற்று பரவல் தீவிரமடைவதற்குக் காரணமாக உள்ளது என்றும் அவர் மெலும் எச்சரித்துள்ளார்.
இந்த நிலைமை சுகாதார பணியாளர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், மருத்துவமனைகள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.