வடமாகாண கல்வித்துறையில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்கள் குறித்த 70 பக்க அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு!
வடமாகாண கல்வித்துறையில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்கள் தொடர்பாக சுமார் 70 பக்க அறிக்கையை ஆளுநரிடம் கையளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, வடமாகாண கல்வித்துறையில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்கள் தொடர்பாக சுமார் 70 பக்க அறிக்கையை ஆளுநரிடம் கையளித்திருக்கின்றோம்.
இதற்கு முன்னர் வடமாகாண ஆளுநர்களாக பதவி வகித்த சந்திரசிறி தொடக்கம் பி.எஸ்.எம்.சாள்ஸ் வரை தெரியப்படுத்தியும் விசாரணைகள் முழுமையாக இடம்பெற்றிருக்கவிலை்லை.
இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்திடம் முறைப்பாடுகளை தருமாறு எழுத்து மூலம் கோரியிருந்தார். அதற்கமைய 70 பக்க அறிக்கையை,
நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை ஆளுநர் செயலகத்தில் கையளித்துள்ளதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.