திடீரென இடிந்து வீழ்ந்த தங்க சுரங்கம்!! -சூடானின் 38 பேர் பரிதாப பலி-
சூடான் நாட்டின் மேற்கு கோர்டோபான் மாகாணத்தில் உள்ள தங்க சுரங்கமொன்று நேற்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் கார்ட்டூமுக்கு தெற்கே 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புஜா என்ற கிராமத்தில் செயல்படாத நிலையில் இருந்த தங்க சுரங்மே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களைத் தவிர குறைந்தது 8 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டில் கிழக்கு ஆபிரிக்க நாடான சூடான் 36.6 தொன் தங்கங்களை உற்பத்தி செய்தமையும் குறிப்பிடத்தக்கது.