படுக்கயறையில் வேற்றுகிரகவாசி!! -பதிவான விநோத வழக்கு-
அயர்லாந்தில் இந்த வருடத்தில் மட்டும் வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக 8 விநோத வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 17 திகதி டவுன்பேட்ரிக் பகுதியில் இருந்து வெளியான ஒரு செய்தி அறிக்கையில், ஒரு உள்ளூர் நபர் விண்கலம் மற்றும் வானத்தில் தோன்றிய ஒளிரும் விளக்குகள் பற்றி கூறினார்.
இதற்குப் பின் மே மாதத்தில், மாகாபெரி பகுதியில் உலங்குவானூர்தி காணப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளை ஒளி காணப்பட்டது என உள்ளூரில் 2 சாட்சிகள் பதிவாகியுள்ளது.
ஜூன் மாதத்திற்குப் பின் உள்ளூர் வாசியொருவர் தனது படுக்கையறையில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
ஜூலை மாதம் நியூடவுன்பி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கமெராவில் ஒரு வித்தியாசமான உருவம் வருவது போன்ற காட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்தது.
சென்டர்பீல்ட் பகுதியில் டோம் வடிவிலான ஒரு பொருளை பொலிஸார் கண்டுபிடித்தனர். அதில் 8 இடங்களில் இருந்து வெளிச்சம் தோன்றுவதைக் காண முடிந்தது. அக்டோபரில், வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்பட்டதாகக் கூறிய ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இறுதியாக கடந்த மாதம் நவம்பரில், வானத்தில் ஒரு வித்தியாசமான பிரகாசமான ஒளி காணப்பட்டதாகவும், அதனால், தான் மிகவும் பீதி அடைந்ததாகவும் உள்ளூர் வாசியொருவர் பொலிஸாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.
இருப்பினும் வடக்கு அயர்லாந்தின் பொலிஸ் துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர், இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.