கமு அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் 2021/2022 பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம்
கமு அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் 2021/2022 பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் பாடசாலை கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (25) அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது நிகழ்வில் முதலாவதாக கிராஅத்துடன் கூட்டம் ஆரம்பமானதுடன் தலைமை உரையினை அதிபர் மேற்கொண்டார்.
குறித்த அதிபர் உரையில் பாடசாலை அடைவானது பின் தங்கி உள்ளது பற்றி எடுத்துரைத்ததுடன் பாடசாலையின் சமகால நிலமை பற்றியும் அவர் தெரிவித்தார்.
மேலும் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வில் பழைய மாணவரான வைத்தியர் ஏ.எம்.ஏ அஸீஸ் தெரிவித்ததாவது
பாடசாலையின் முன்னேற்றுவதற்கான அவசியத்தையும் வலியுறுத்தியதுடன் பாடசாலையின் முன்னைய நிலையையும் ,தற்போதைய நிலையையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துடன் இப்பாடசாலைக்கான சகல உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
இதன் பிற்பாடு புதிய நிருவாக உத்தியோகத்தர்கள் தெரிவு இடம் பெற்றது.இதன் போது தலைவராக அதிபர் எம்.எஸ்.எம். பைசால் ,உப-தலைவர் வைத்தியர் ஏ.எம்.ஏ அஸீஸ் ,செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி(LLB),உப-செயலாளர்-கே.எம் அஸ்கர் ,பொருளாளர் என்.எம் நெளஷாத் ,கணக்கு பரிசோதகர் எஸ்.எம் ஹாஜா ,ஆகியோருடன் அங்கத்தவர்களாக எம்.ஏ சிறாஜ் ,யூ.கே. லாபீர், யூ.எல் றியாழ் ,யூ.எல் முஜாஹித் ,இ.எம் சமீம், எம்.எம். றிஸ்வான் ,ஏ.தாஹிர் ,ஏ.எல்.எம் ஹனீபா ஹாஜியார் ,எம்.சர்ஜூன், எம்.சி.எம் ,ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
பின்னர் செயலாளர் ஜிப்ரியின் நன்றி உரையுடன் கூட்டம் ஸலாத்துடன் இனிதே நிறைவு பெற்றது.