SuperTopAds

ஆண்களின் துணையின்றி பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்யத் தடை!! -தலிபான்கள் அதிரடி உத்தரவு-

ஆசிரியர் - Editor II
ஆண்களின் துணையின்றி பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்யத் தடை!! -தலிபான்கள் அதிரடி உத்தரவு-

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆண்களின் துணையின்றி பெண்கள் இனி தனியாக நீண்ட தூரம் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவிட்டுள்ள தலிபான்கள்  நீண்ட தூரப் பயணங்களின் போது அவர்களுடன் நெருங்கிய ஆண் உறவினர் இருப்பது கட்டாயம் என்று கட்டளையிட்டுள்ளனர்.

நெருங்கிய ஆண் உறவினர்கள் இல்லாமல் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு பயணத்திற்கான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட மாட்டாது என்று தாலிபான் அதிகாரிகள் வெளியிட்ட புதிய உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழிகாட்டுதல்களை தாலிபான் அமைப்பின் நன்னடத்தை மற்றும் தீமை தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.