இ.போ.சபையின் வடமாகாணத்தில் உள்ள 7 சாலைகளினதும் நிலையான வைப்பில் உள்ள 15 கோடியை சுரண்ட திட்டம்! கடனாக கேட்கிறார்களாம்..

ஆசிரியர் - Editor I
இ.போ.சபையின் வடமாகாணத்தில் உள்ள 7 சாலைகளினதும் நிலையான வைப்பில் உள்ள 15 கோடியை சுரண்ட திட்டம்! கடனாக கேட்கிறார்களாம்..

இ.போ.சபையின் வடமாகாணத்தில் உள்ள 7 சாலைகளிலும் நிலையான வைப்பில் உள்ள பணத்தை எதிர்வரும் 27ம் திகதி திங்கள் கிழமை மக்கள் வங்கியின் தலைமை காரியாலய வங்கி கணக்கில் வைப்பிடுமாறு இ.போ.ச தலைமை காரியாலயம் கூறியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. 

குறித்த பணத்தை கடனாக பெறுவதாகவும், அதனை 10 மாத தவணையில் மீள செலுத்துவதாகவும் அறிவிப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தொியவருகின்றது. 

வடக்கில் நிலையான வைப்பில் 15 கோடி ரூபா பணம் உள்ளது. இலங்கையிலேயே வடக்கிலுள்ள சாலைகளில் மட்டுமே நிலையான வைப்பில் பணம் உள்ளது. நாளாந்தம் பேரூந்துகளை செயலாற்றுவதன் மூலம் பெறப்படுகின்ற 

வருமானத்தில் தான் டீசல் மற்றும் பேரூந்துகளுக்கு தேவையான உதிரிபாகங்களை கொள்வனவு செய்வது மட்டுமில்லாது ஒருவருக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தில் 15,200 /= ரூபா மட்டுமே அரசாங்கம் வழங்கும் நிலையில் 

குறித்த நிலையான வாய்ப்பு எடுக்கப்படுமானால் ஓய்வு பெறும் ஊழியர்கள் பணி கொடுப்பனவு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என அச்சம் வெளியிடப்படுகிறது. ஆகவே அமைச்சரவை பத்திரம் ஏதும் தாக்கல் செய்யப்படாமல் 

கணக்காளர்கள் வழங்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் சாலை முகாமையாளர்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு