நடு ஆற்றில் திடீரென தீப்பிடித்து எரிந்த படகு!! -40 பயணிகள் பரிதாப பலி-
வங்காளதேசத்தில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்த விபரீத சம்பவத்தில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிமை நடந்த குறித்த படகு விபத்தில் சிக்கிய சுமார் 150 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வங்காளதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுகந்தா ஆற்றில் டாக்காவில் இருந்து பார்குணா நோக்கி சென்ற அந்த படகின், என்ஜின் பகுதியில் முதலில் தீப்பற்றியதாக தெரிகிறது. பின் படகின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது.
இதனால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தீயில் சிக்கிக்கொண்டனர். பலர் உயிர்பிழைப்பதற்காக தண்ணீரில் குதித்து நீந்தி கரையேறி உள்ளனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 40 பேரில் பெரும்பாலானோர் தீயில் சிக்கி இறந்துள்ளனர். சிலர் ஆற்றில் குதித்ததால் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். குறித்த படகில் மொத்தம் 800 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.