ஈ.பி.டி.பி குறித்து பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை..
தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரம் இருந்தால் அத னை ஈ.பி.டி.பி முதலில் வெளியிட வேண்டு ம் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச் சுவார்த்தை நடத்தும் அளவுக்கு ஈ.பி.டி.பி ஒரு பெரிய கட்சி அல்ல எனவும் கூறியுள் ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தி ல் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.
இதன்போது தமிழ்தேசிய கூட்ட மைப்பு உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பியுடன் பேச்சு நடத்தியதற்கான ஆதாரங்கள் இ ருப்பதாக ஈ.பி.டி.பி அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு ஈ.பி.டி.பி என்பது பெரிய கட்சியோ, முக்கியத்துவம்வாய்ந்த கட்சியோ அல்ல. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதார ங்கள் இருந்தால் அதனை வாயால் கூறிக்கொண்டிருக்காமல் வெளிப்படுத்தட்டும் பார்க்கலாம். மற்றபடி
ஈ.பி.டி.பி கட்சி பற்றி பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை என சுமந்திரன் கூறினார்.