SuperTopAds

அமெரிக்காவின் ஆயுத விற்பனை வீழ்ச்சி!!

ஆசிரியர் - Editor II
அமெரிக்காவின் ஆயுத விற்பனை வீழ்ச்சி!!

அமெரிக்கா நாட்டின் அரசுக்கு வெளிநாடுகளுக்கான ஆயுத விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் இவ்வாண்டில் 21 வீதமாக குறைவடைந்து 138 பில்லியன் டொலர்களாக உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பல்வேறு வரைமுறையற்ற ஆயுத விற்பனை நடைமுறைகளில் இருந்து தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடன் நிர்வாகம் விலகியதால் இந்த ஆயுத விற்பனை மூலமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 2021 நிதியாண்டிற்கான இராணுவ ஆயுத-தளபாட விற்பனை புள்ளிவிவரங்களை அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டது.

2021 நிதியாண்டின் ஆயுத-தளபாட விற்பனையில் அவுஸ்திரேலியாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 3.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள அப்பாச்சி (யுர்-64நு யுpயஉhந) தாக்குதல் ஹெலிகப்டர்களும், இஸ்ரேலுக்கு விற்பனை செய்யப்பட்ட 3.4 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஊர்-53மு ஹெலிகப்டர்களும் அடங்கும்.

முந்தைய நிதியாண்டில் அமெரிக்க இராணுவ உபகரணங்களின் விற்பனை மொத்தம் 175 பில்லியன் டொலர்களாக இருந்தது.

யேமனில் பொதுமக்கள் உயிரிழப்புகள் காரணமாக சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் ஆயுதங்களை விற்பனை செய்வதிலிருந்து ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகம் விலகியுள்ளது.

அமெரிக்கா தனது ஆயுத விற்பனை தொடர்பான கொள்கைகளின்போது நாடுகளின் மனித உரிமை நிலவரங்களையும் கருத்தில் எடுக்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்களின் நேரடி இராணுவ ஆயுத-தளபாட விற்பனை 2020 நிதியாண்டில் 124 பில்லியன் டொலராக இருந்தது. இது 2021 நிதியாண்டில் 17மூ குறைந்து 103 பில்லியன் டொலர்களாக உள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விற்பனை 2021 இல் 50.8 பில்லியன் டொலரில் இருந்து 31மூ சரிந்து 34.8 பில்லியன் டெலர்களாக உள்ளது என்று வெளியுறவுத் துறை குறிப்பிட்டுள்ளது.