SuperTopAds

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மின்தடை! மின்சக்தி அமைச்சு விடுத்திருக்கும் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மின்தடை! மின்சக்தி அமைச்சு விடுத்திருக்கும் அறிவிப்பு..

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் திருத்த பணிகள் பூர்த்தியடையாத நிலையில் நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுலாகும். என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலஷன ஜயவர்த்தன கூறியுள்ளார். 

தேசிய மின் கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் முழு கொள்ளளவை இணைக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.அதன்படி, சில பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு 

மின் விநியோகம் தடைப்படும் என அவர் தெரிவித்தார்.