மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! -ஜப்பான் அரசு அதிரடி நடவடிக்கை-
ஜப்பான் நாட்டில் மரண தண்டனைக் கைதிகள் 3 பேருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2019 ஆம் ஆண்டுக்குப் பின் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை இதுவாகும்.
அத்துடன், அந்நாட்டில் கிஷிடா-கியோடா பிரதமராக பதவி ஏற்றபின் வழங்கப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும். நீதி அமைச்சர் யோஷிஹிசா பூருகாவா உத்தரவின் அடிப்படையில் 3 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை தூக்கிலிடப்பட்டனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் தூக்கிலிடப்பட்டவர்களின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ள நீதி அமைச்சர் இது குறித்து மேலதிக விபரங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.