SuperTopAds

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி!! -பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது-

ஆசிரியர் - Editor II
பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி!! -பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது-

பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி காரணமாக பலத்த மழை கொட்டியதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த அனர்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஜ தாண்டியுள்ளது. 

அந்நாட்டை நாட்டை சூறாவளி கடுமையாக தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல் அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கியது.

குறிப்பாக சியார்கோ, சூரிகாவோ ஆகிய பகுதிகளில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். 

சூறாவளி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. மேலும் பலரைக் காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.  மீட்பு பணியில் இராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறை, கடலோர காவல் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.