லைற்றர் வெடித்து மீசை கருகியது..! யாழ்.சாவகச்சோியில் இரு சம்பவங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
லைற்றர் வெடித்து மீசை கருகியது..! யாழ்.சாவகச்சோியில் இரு சம்பவங்கள் பதிவு..

யாழ்.சாவகச்சோியில் லைற்றர் மூலம் சிகரெட்டை பற்றவைத்தபோது லைற்றர் வெடித்ததில் தீப்பற்றி மீசை கருகிய சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. 

சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது. 

அதனால் , அவரது மீசை தீயில் கருகியது. இருந்த போதிலும் பெரியளவிலான அனர்த்தம் ஏற்படவில்லை. அதேவேளை நேற்று மாலை சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு அருகில் முதியவர் ஒருவர் 

லைட்டர் மூலம் சுருட்டை பற்ற வைக்க முனைந்த போதிலும் , லைட்டர் வெடித்துள்ளது. நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடிப்புக்கள் வெடிப்பு சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ள நிலையில், 

தற்போது சாவகச்சேரியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு