பிரித்தானிய சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் மரணம்!! -அதிகாரிகளே காரணம் என தெரிவிப்பு-
பிரித்தானியா நாட்டில் உள்ள சிறைச்சாலையில் தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கு அந்நாட்டு அதிகாரிகளே பொறுப்பு என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கேதீஸ்வரன் குணரட்னம் என்ற இலங்கைத் தமிழர் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி பிரித்தானிய சிறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
குறித்த சம்பவம் தொடாபில் சட்ட வைத்திய அதிகாரிகள் விசாரணை நடாத்தியிருந்தனர். இதன் போது சரியான பராமரிப்பு இன்மையினால் கேதீஸ்வரன் உயிரிழந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாடடின் உள்துறை அமைச்சு, சிறைச்சாலை திணைக்களம், சுகாதார தரப்பினர் ஆகியோர் இந்த மரணத்திற்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.