SuperTopAds

யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு நாளை! கூட்டமைப்பு எதிர், ஈ.பி.டி.ப மௌனம், செயல் வீரர்கள் தோற்கடிக்கப்படுவார்களா?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு நாளை! கூட்டமைப்பு எதிர், ஈ.பி.டி.ப மௌனம், செயல் வீரர்கள் தோற்கடிக்கப்படுவார்களா?

யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு நாளை சமர்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதீட்டை எதிர்த்து வாக்களிக்கும் நிலைப்பாட்டினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

அதேவேளை ஐ.தே.கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி ஆகியனவும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும் எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியன தொடர்ந்தும் அமைதி காத்துவருவதுடன் நிலைமைகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கலாம். என கூறப்படுகின்றது. இந்நிலையில் மொத்தமாக பாதீட்டுக்கு எதிராக

24 உறுப்பினர்கள் வாக்களிக்க கூடும் என கூறப்படும் நிலையில் நாளை பாதீடு தோற்கடிக்கப்பட்டு செயல் வீரர்கள் ஆட்சியிலிருந்து விலக்கப்படுவார்களா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.