உக்ரனை ஆக்கிரமிக்க முயன்றால் விளைவுகள் மோசமாகும்!! -புடினை எச்சரித்த பைடன்-
உக்ரைனை ஆக்கிரமித்தால் அதற்காக ரஷ்யா கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் தெரிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
வொஷிங்டனில் நேற்று பத்திரையாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால் ரஷ்யா தொடர்பான உலகின் நிலைப்பாடு மாற்றமடையும் என புடினிடம் தொலைபேசியில் பேசும்போது தெளிவுபடுத்தியதாக தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று லிவர்பூலில் நடந்த கூட்டத்திற்குப் பின்னர் ஜி-07 நாகளின் வெளியுறவு அமைச்சர்களும் உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்யாவை எச்சரிக்கும் வகையில் செய்தியை அனுப்பியுள்ளனர்.
ரஷ்யாவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு முயற்சியும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். மோசமான சூழலுக்கு வழிவகுக்கும் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.