’குளங்களைப் பிடித்தவர்களை வெளியேறுமாறு தீர்ப்பு’

ஆசிரியர் - Admin
’குளங்களைப் பிடித்தவர்களை வெளியேறுமாறு தீர்ப்பு’

வவுனியா - பண்டாரிக்குளத்தின் அலைகரை பகுதியை அத்துமீறி பிடித்த ஆறு பேரையும், உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று, வவுனியா நீதிமன்று தீர்ப்பு  வழங்கியுள்ளதாக, வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.விஸ்னுதாசன் தெரிவித்தார்.

வவுனியாவில், இன்று (09) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

 இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், வவுனியா மாவட்டத்தில் குளங்களுக்குச் சொந்தமான காணிகளை அடாத்தாபிடித்தல் மற்றும் வயற்காணிகளை அடாத்தாகப்பிடித்து, மண் நிரவி, வீடுகள் அமைக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளது என்றார்.

இது தொடர்பாக வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளரால், 2020ஆம் ஆண்டளவில்,  வவுனியா - பண்டாரிக்குளத்தின் அலைகரை பகுதியில், குளத்துக்கு சொந்தமான காணியினை அத்துமீறி பிடித்தமை தொடர்பாக 32 வழக்குகள் தொடரப்பட்டன எனவும்,அவர் கூறினார்.

"இதனடிப்படையில், அந்த வழக்குகளில், 6 வழக்குகளுக்கான தீர்ப்பு நீதிமன்றத்தால், புதன்கிழமை (8)  வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், குறித்த 6 நபர்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு